வேலையில்லா பட்டதாரி 2 | படம் எப்படி இருக்கு ?

கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷின் கதை வசனத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி 2

சவுந்தர்யா ரஜினிகாந்த் :
கே எஸ் ரவிக்குமார் பின்புலத்தில் கோச்சடையான் இருந்ததை போல இந்த படத்தில் தனுஷ் எல்லாமுமாய் தெரிகிறார் . தனித்தன்மை நிருபிக்க சவுந்தர்யா இனி வரும் படங்களில் முயற்சிக்க வேண்டும்

வேலையில்லா பட்டதாரி எனும் சூப்பர் ஹிட் படத்திற்கு பிறகு அதற்கு ஈடான வெற்றி பெற கடுமையாக முயற்ச்சி செய்திருக்கிறார்கள் .

முதல் பாகத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இதிலும் வருவதால் வசுந்தராவை மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு நேராக கதைக்குள் பயணிக்கிறது இந்த படம்.

மிகப்பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாமலும் சிரிக்க கூடிய வசனங்களால் படம் மிகும் சுவாரசியமாக நகருகிறது .

விவேக் & கோ குபீர் சிரிப்பு

ஷான் ரோல்டன் இசை நன்றாக இருக்கிறது, இருந்தாலும் அனிருத் இருந்திருக்கிலாம்

அமலா பால் மிக சிறப்பாக நடித்திருக்கிறார் , பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்

தனுஷின் வசனமும் தனுஷும் படத்தின் பலம்

Subscribe Cinedipper TV