ரஜினியும் அரசியலும் – இன்னுமா எதிர்பார்க்கிறது தமிழகம் !

இருபது ஆண்டுகளாக ரஜினியும் அரசியலும் பரபரப்பும் ஒன்றோடு இணைந்தே இருந்து வந்தது .அரசியலுக்கு அச்சாரம் போடும் வகையில் ரசிகர்களை சந்தித்து தன கருத்துக்களை பதிவிட்டுள்ளார் . இருந்தாலும் வழக்கம் போல ஆண்டவன் முடிவு செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

அரசியலுக்கு வரவேண்டுமா ரஜினிகாந்த் ? மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என தேர்தலை சந்திக்கும் போதுதான் தெரிய வரும் .

ரஜினி காந்த் அவர்கள் அரசியலுக்கு என் தேவை இல்லை என எங்களின் தனி பட்ட கருத்துக்கள் அதற்க்கு காரணம் பின் வரும் கேள்விகள்.

திடமான முடிவு எடுக்கும் திறமை இருக்கிறதா ? :

நடிகர் என்பதை தாண்டி என்ன திறமை உள்ளது ?

தமிழ மக்களுக்கு இதுவரை என்ன செய்து இருக்கின்றார் ?

தன திரைப்படம் வரும் போதெல்லாம் அதை வியாபார படுத்த அரசியில் பேச்சு எடுக்கும் ரஜினி காந்த் , மக்களுக்கு என்ன செய்துருக்கார் ? திரைப்படம் வெளி வரும் பொழுது அவரது ரசிகர்களுக்காவது சினிமா டிக்கட் கொடுத்துள்ளாரா?

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் . தன்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற தமிழக மக்களுக்கு என்ன மாற்று அரசியல் திட்டம் வைத்திருக்கிறார் ?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் தலைமை சக்திகளாக இருந்த பொழுது எதுவும் பேசாமல் இப்பொழுது வெற்றிடம் வந்ததும் அரசியல் பற்றி வலுவான கருத்து இருப்பது போல பேசுவது எந்த அளவுக்கு நம்பக தன்மையை கொடுக்கும் ?

பலம் வாய்ந்த சக்திகளை எதிர்த்து அரசியல் செய்த விஜயகாந்த் , தன கருத்துக்களை தைரியமாக தெளிவாக எடுத்து வைக்கும் சீமான் . இவர்களை எல்லாம் முழுதாய் ஏற்காத தமிழக மக்கள் ரஜினி காந்தை மட்டும் எப்படி ஏற்று கொள்வார்கள் ?

Subscribe Cinedipper TV